ஜனாதிபதி வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நுவென் மின் ட்ரியொட்டின் விசேட அழைப்பை ஏற்றே ஜனாதிபதி அங்கு சென்றார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவும் முக்கியஸ்தர்களின் குழுவென்றும் அங்கு சென்றுள்ளது.
வியட்நாமின் ´நொய்பாய்´ சர்வதேச விமான நிலையத்தில் வியட்நாமின் முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு அளிக்கவுள்ளனர். இன்று மாலை இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் சமூக, பொருளாதார, வர்த்தக, மற்றும் விவசாய விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. இன்று இரவு வியட்நாம் ஜனாதிபதியின் மாளிகையில் எமது ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு விருந்துபசாரமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply