நான்கு மாவட்ட மக்கள் நேற்று மீள்குடியேற்றம்
இடம்பெயர்ந்து வவுனியா நிவா ரணக் கிராமங்களில் தங்கியிருந்த 41,655 பேர் நேற்று தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் பட்டுள்ளனர்.கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவு னியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள 12,095 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவர்களாவர். இவர்கள் நேற்றுக் காலை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான பிரதான வைபவம் நேற்று மாந்தையில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசக ரும், பாராளுமன்ற உறுப்பினரு மான பஷில் ராஜபக்ஷ, அமைச்ச ர்கள் ரிசாட் பதியுதீன், ஆறுமுகன் தொண்டான், எம். எஸ். எஸ். அமீரலி, மில்றோய் பெர்னாண்டோ, எம். எஸ். சந்திரசேன, தயாசிறி த திசேரா, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக நேற்று ஆறு வைபவங்கள் இடம்பெற்றன.
துணுக்காயில் இடம்பெற்ற வைப வத்தில் அமைச்சர் அமீரலியும் வவு னியாவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் எஸ். எம். சந்ரசேனவும் மன்னாரில் இடம்பெற்ற வைபவத் தில் அமைச்சர் மில்றோய் பெர் னாண்டோவும் கலந்துகொண்டுள்ள னர்.
இடம்பெயர்ந்த மக்கள் கிளி நொச்சி, முல்லைத்தீவு மாவட்டங் களுக்கு நேற்றைய தினமே முதல் தடவையாக மீளக் குடியமர்த்தப்ப ட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரச்சி பிரதேச செயலாளர் பிரிவுகள், முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரவுகள், வவுனியா மாவட்ட வெங்கல செட்டிக்குளம், வவுனியா பிரதேச செயலகப் பிரிவு, வவுனியா தெற்கு செயலகப் பிரிவு, மன்னார் மாவட்டத்தின் மாந்தை, மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவு மக்களே நேற்று மீள் குடியேற்றத் துக்காக அனுப்பப்பட்டனர்.
வவு னியா மாவட்டத்தில் 2583 குடும்ப ங்களைச் சேர்ந்த 8643 பேர், மன் னார் மாவட்டத்தில் 2644 குடும்ப ங்களைச் சேர்ந்த 6631 பேர், முல் லைத்தீவு மாவட்டத்தில் 4415 குடும் பங்களைச் சேர்ந்த 16,394 பேர், கிளி நொச்சி மாவட்டத்தில் 2453 குடும் பங்களைச் சேர்ந்த 10017 பேரும் நேற்றைய தினம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளனர்.
மீள் குடியேறும் குடும்பம் ஒவ் வொன்றுக்கும் உடனடி தேவைக் கான பொருட்களைப் பெற்றுக் கொள்ள 5,000 ரூபாவும் வழங்கப் பட்டுள்ளன. அத்தோடு தற்காலிக குடியிருப் புகளை அமைத்துக் கொள்ளவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருபதி னாயிரம் ரூபா படி அவரவர் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளன. இவர்கள் தமக்கான பொருட் களை குறைந்த விலையில் பெற்று க்கொள்ள வசதியாக கூட்டுறவுக் கடைகள், லக் ச. தொ. ச. நிலைய ங்களும் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற மீள் குடி யேற்றத்தையொட்டி கருங்கண்டல் றோமன் கத்தோலிக்கப் பாடசாலை யில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து மாணவர் களுக்கான சீருடைகள், கல்வி உபகரணங்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வழங்கிவைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply