புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.

புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார். இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply