மீள் குடியேற்றும் பணியில் உலகில் இலங்கையே முதலிடம்: பசில் ராஜபக்ஷ

இடம்பெயர்ந்துள்ள மக்களைத் துரிதகதியில் மீளக்குடியேற்றும் பணியை இலங்கையைப் போன்று உலகில் வேறெந்த நாடுமே முன்னெடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்தி க்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மன்னார்-மாந்தையில் தெரிவித்தார். அவ்வாறு உலகில் எங்காவது இடம்பெற்றிருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் நிரூபிக்குமாறும் பசில் ராஜபக்ஷ எம்.பி. சவால் விடுத்தார்.வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 12095 குடும்பங்களைச் சேர்ந்த 41685 பேரை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் பிரதான வைபவம் மன்னார், மாந்தையில் நேற்று நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ எம்.பி. வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவர்கள் இழந்துள்ள உயிர்களைத் தவிர ஏனைய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்கு ஏற்ப நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் சொந்த இடங்களது உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் துரிதமாக மீளமைக்கப்படுகின்றன. பயங்கரவாத நடவடிக்கை காரணமாக அழிவுற்றுள்ள சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. வீதிகள், பாலங்கள் ஆஸ்பத்திரிகள், பாட சாலைகள், மின்சாரம், குளங்கள், வாவிகள் என சகல வசதிகளும் புனரமைக் கப்படுகின்றன. இவற்றை மீளக்குடியமரும் மக்கள் நேரில் பார்க்க முடியும்.

மீளக்குடியேற்றப்படுகின்ற விவசாயிகளுக்கு விதை நெல், பசளை, விவசாய உபகரணங்கள் என்பவற்றை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேநேரம் மீளக்குடியமர்த்தப்படும் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணைங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புன ரமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்திலிருந்து எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி 13411 ஏக்கர் நிலத்திற்கு விவசாயம் செய்ய வென தண்ணீர் வழங்கப்படவிருக்கின்றது.

அதேநேரம் கடந்த 20 வருடங்களாகச் செய்கை பண்ணப்படாத 11026 ஏக்கர்விவசாய நிலத்திற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி தண்ணீர் வழங்கப்படும். இதன் பயனாக சொந்த இடங்களில் மீளக் குடியமரும் மக்கள் முன்பு போன்று வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை கடந்த ஏப்ரல் மாதம் முதல் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி வருகின்றோம். அதன் படி கடந்த ஏப்பரல் முதல் இற்றைவரையும் 48976 மக்களை மீளக்குடியமர்த்தியுள்ளோம். இன்று 41685 பேரை மீளக் குடியமர்த்துகின்றோம்.

இதன்படி இடம் பெயர்ந்துள்ளவர்களில் சுமார் ஒரு இலட்சம் பேரை சொந்த வாழிடங்களில் மீளக்குடி யமர்த்தியுள்ளோம். ஏனையவர்களும் துரி தமாக மீளக்குடிய மர்த்தப்படுவர். இலங்கையில் போன்று உலகில் வேறெங் குமே இடம்பெயர்ந்த மக்கள் துரித கதியில் சொந்த இடங்களில் மீளக் குடிய மர்த்தப்படவில்லை. அமெரிக்காவில்கூட சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏழு வருடங்களாகியும் முகாம்களில் தான் வாழுகின்றனர் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply