இலங்கைக்கு விஜயம் செய்ய வியட்நாம் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று வியட்நாம் ஜனாதிபதி நுயன்மின் ட்ரயட், இலங்கைக்கு விஜயம்செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்நாட்டு ஜனாதிபதியை நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போதே இலங்கை வருவதற்கான இந்த அழைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது இரு அரசாங்கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.
இருதரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந்நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply