கப்பம், கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் மடக்கிப்பிடிப்பு
படுகொலை செய்தல், ஆட்களைக் கடத்தி கப்பம் அறவிடுதல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் துறைப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க நேற்றுத் தெரிவித்தார்.
வவுனியா குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான புலன் விசாரணைகள் வன்னிப் பிராந்திய மேற்கு பகுதிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ள ப்படுவதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply