கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து;மூவர் பலி
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் பயணம் செய்த வாகனமொன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினைச் சேர்ந்த மூவர் ஸ்தலத்திலேயே பலியானார்கள் . வாகன திருத்த வேலைகளுக்காக குறித்த இராணுவ வீரர்கள் இவ் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை குருநாகல் மாவட்ட கோக்கரல்ல என்னுமிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனம் பாதைய விட்டு விலகி மரமொன்றுடன் மோதியுள்ளதாக சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply