பயணத்தின் போது பாதியில் தரைதட்டி நிற்கும் உல்லாச கப்பல்: பயணிகள் அதிர்ச்சி

டென்மார்க் நாட்டை சேர்ந்த சன்ஸ்டோன் குழுவிற்கு சொந்தமானது ஓஷன் எக்ஸ்ப்லோரர் எனும் சொகுசு கப்பல். இது 2021-ல் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல், உலகில் உள்ள மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

எக்ஸ்ப்லோரர் கப்பல் சுமார் 205 பேருடன் கிரீன்லேண்டு நாட்டை நோக்கி செப்டம்பர் 1 அன்று 3-வார பயண திட்டத்துடன் புறப்பட்டு சென்றது. வரும் 22-ம் தேதியன்று பயணத்தை முடித்து கொண்டு மீண்டும் திரும்ப இருந்தது. இப்பயணத்திற்கு பயணக்கட்டணமாக சுமார் ரூ.30 லட்சம் வரை பெறப்படுகிறது.

இந்நிலையில், 3 தினங்களுக்கு முன் கிரீன்லேண்டு நாட்டின் வடகிழக்கு கடற்பகுதியில் உள்ள அல்பெஃப்ஜோர்ட் எனும் இடத்தில் அக்கப்பல் தரைதட்டியது. அக்கப்பலுக்கு உதவி செய்வதற்காக நுட் ராஸ்முசென் எனும் ஒரு கப்பல் புறப்பட தொடங்கி பயணிக்கிறது. தரைதட்டி நிற்கும் அக்கப்பலில் பல வயதான பயணிகள் உள்ளனர் என்பதும் அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதும் பயணிகளின் உறவினர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது.

ஆனால் கப்பலிலேயே ஒரு மருத்துவர் உள்ளார் என்பது சற்று ஆறுதலான செய்தி. பயணிகள், நகராமல் நிற்கும் அக்கப்பலிலிருந்து, தொலைவில் தெரியும் பனிமலைகளை கண்டு ரசித்து, நேரத்தை கழித்து, தங்களை உற்சாகமாக வைத்து கொள்வதாக அக்கப்பலில் இருந்து அவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். ஆர்க்டிக் பகுதியில் டென்மார்க் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் “ஜாயிண்ட் ஆர்க்டிக் கமாண்ட்” படையினர் நிலைமையை கூர்ந்து கவனித்து மீட்பு பணியையும் நிர்வகித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply