சீன ஆய்வுக் கப்பலின் வருகை திகதி தீர்மானிக்கப்படவில்லை : அமைச்சர் அலி சப்ரி 

சீனாவின் ‘ஷி யான் 6’ ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்பதுடன், இந்த விடயங்கள் இராஜதந்திர ரீதியில் கையாளப்படும் என, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்துசமுத்திர வலய நாடுகள் அமைப்பின் 23ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம், 11ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் தொடர்பாக

தெளிவுபடுத்தும் நோக்கில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று நேற்று முன்தினம் (14) வெளிவிவகார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது ‘ஷி யான் 6’ என்ற சீன ஆய்வுக்கப்பலின் வருகை மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் இராஜதந்திர மோதல்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ இன் வருகையுடன் தொடர்புடைய விவகாரங்களில் தாம் (வெளிவிவகார அமைச்சு) நேரடியாக தொடர்புபடவில்லை எனத் தெரிவித்த அவர், அக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். ‘ஷி யான் 6’ கப்பலின் வருகை தொடர்பாக வெளியான செய்திகளை அடுத்து இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையே நிலவும் முறுகல் நிலையை இந்துசமுத்திர வலய நாடுகள் அமைப்பின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் போது எவ்வாறு கையாளப் போகின்றீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அலி சப்ரி, எந்தவொரு நாடும் இவ்வாறான விடயங்களை இராஜதந்திர ரீதியிலேயே கையாளும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply