கைதிகள் 933 பேருக்கு விசேட பொதுமன்னிப்பு தேசிய சிறைக்கைதிகள் தினம்

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 933 பேருக்கு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “12ஆம் திகதியன்று நடைபெற்ற 25ஆவது தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பில் 34ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கமைய, சிறைப்படுத்தப்பட்டிருக்கும் கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பின்வரும் நியமங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கமைய, கைதிகளுக்காக இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் 2023.9.12ஆம் திகதியாகும்போது சிறைப்படுத்தப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் தண்டனை, அனுபவித்த வருடத்துக்கு அல்லது அதன் ஒருபகுதிக்கு ஒருமாத மன்னிப்பு வழங்குதல், அபராதம் செலுத்தாமை காரணமாக 2023.09.12ஆம் திகதியாகும் போது சிறைப்படுத்தப்பட்டு தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் அனுபவித்துவரும் தண்டனையின் எஞ்சிய தண்டனைக் காலத்தை நீக்குதல், 2023.09.12ஆம் திகதியாகும் போது விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையில் அரைவாசி அல்லது அதற்கு அதிக காலத்தை செலுத்தியிருக்கும், 65 வயதை தாண்டியுள்ள சிறைக்கைதிகளின் தண்டனையின் எஞ்சிய காலத்தை நீக்குதல், 2023.09.12ஆம் திகதியாகும் போது 40 வருடம் அல்லது அதற்கு அதிக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனையில் 20 வருடகால தண்டனையை அனுபவித்திருக்கும் (மேல் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட திகதியிலிருந்து) சிறைக்கைதிகளின் தண்டனையில் எஞ்சிய தண்டனைக் காலத்தை நீக்குதல்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply