மசாக்ரே ஆறு பிரச்சினையால் ஹைதி உடனான எல்லைகளை மூடிய டொமினிக் குடியரசு

தென் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசு மற்றும் அதன் அண்டை நாடான ஹைதி எல்லையில் மசாக்ரே ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகள் இடையே நீண்ட காலமாக பிரச்சினை உள்ளது. குறிப்பாக அங்குள்ள ஹைதியன் பகுதியில் சிலர் கால்வாயை தாண்டியதால் இந்த பிரச்சினை தீவிரமெடுத்தது.

இது தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்தநிலையில் ஹைதியுடனான எல்லைகளை காலவரையின்றி மூடுவதாக டொமினிகன் குடியரசு நாட்டின் அதிபர் லூயிஸ் அபினாடர் அறிவித்தார். அதன்படி நேற்று அதன் வான், கடல் மற்றும் தரை என அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. இது அந்த இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply