பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் கைது

மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து காவல்துறையினருடன் இணைந்து செயற்பட்ட நபர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிவனேசராஜா வினோத்குமார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினருக்கும், இராணுவத்தினருக்கும் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறித்த நபர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த குறித்த நபர் தாமாகவே புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்து காவல்துறையினரிடம் சரணடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இவர் வழங்கிய உளவுத் தகவல்கள் போலியானவை என காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிங்களவர் ஒருவரைப் போன்று தோன்றி இவர் தெற்கில் தகவல்களை திரட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply