நவம்பர் 15ம் திகதி தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும்: ஜனாதிபதி

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை உறுப்பினர்களிடம் கருத்து அறியப்பட்டதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் அடிமட்ட அரசியல் நிலைமைகள் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெளிவான விளக்கத்துடன் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தலையா அல்லது பொதுத் தேர்தலையா முதலில் நடத்த வேண்டும் என்பது குறித்து எதிர்வரும் 15ம் திகதி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியை வகிப்பதில் தமக்கு பேராசை எதுவும் கிடையாது எனவும், அதன் காரணமாகவே இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே தாம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதிது; தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply