வரி வருமானத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக்கு அமைய அரசாங்கத்தின் வரி வருவாயை அதிகரிப்பதற்கு முறையான வரி நிர்வாக முறைமை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க வலியுறுத்துகின்றார்.

அத்தியாவசிய பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்த போதிலும், நாட்டின் வரி வருமானத்தில் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மக்கள் மீது புதிய வரிகளை சுமத்தாமல் வரி வருமானத்தை அதிகரிக்க நாணய நிதியம் பரிந்துரைகள் சிலவற்றை முன்வைத்துள்ளதாக பேராசிரியர் பிரியங்க துனுசிங்க அத தெரணவிற்கு தெரிவித்தார்.

அதற்கான 03 பரிந்துரைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் முதல் பரிந்துரையாக வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

வரிச்சலுகைகளை நீக்குவது இரண்டாவது பரிந்துரையாகவும், மூன்றாவதாக வரி ஏய்ப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply