ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் : தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ஒதுக்கப்படுகிறது

நாடாளுமன்றத்தில் அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டிய வருடம் என்பதால் இந்தப் பணம் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் ஜூலை மாதம் மக்கள் எதிர்ப்பினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தின் உள்ளக வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டெம்பர் இறுதியில் நிறைவடையவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply