தூய்மைப் பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி
காந்தி ஜெயந்தியை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் 9.2 இலட்சம் இடங்களில் நேற்று தூய்மைப் பணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த தினம் இன்று (அக்.2) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அக்டோபர் 1 காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு தழுவியதூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார் .
பிரதமர் நரேந்திர மோடி, ஹரியாணாவை சேர்ந்தமல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பான வீடியோவை அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். 4 நிமிடங்கள் 41 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பிரதமர் மோடியும் மல்யுத்த வீரர் அங்கித்தும் ஒரு தோட்டத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். துடைப்பத்தால் குப்பைகளை பெருக்கிக் கொண்டே இருவரும் சுவாரசியமாக உரையாடினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply