ஆறு மாத குழந்தையை அடித்துக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் தாய் கைது

21 வயதுடைய தாய், தனது ஆறுமாத மற்றும் 11 நாட்களே ஆன மகளை அடித்துக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்பொக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊர்பொக்க கட்டுவன கெதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி குழந்தையைக் கழுவி சுத்தம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக தலை சுவரில் மோதியதாகக் கூறி குழந்தையை தாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

எவ்வாறாயினும், மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இந்த சிறுமியின் மரணம் சந்தேகத்திற்கிடமான மரணமாக கருதி ஊறுபொக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது தாய் தனது சிசுவை கடுமையாக தாக்கியமை தெரியவந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் தாயை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply