பொலிஸ்மா அதிபரின் சேவைக்காலம் முடிவடைகிறது : பொலிஸ் தலைமையகம் விசேட அறிவிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் முடிவடைந்த போதும், இதுவரை அவருக்கு இரண்டு சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட சி.டி.விக்ரமரத்ன, மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போது, ​​ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக அவருக்கு 3 மாத கால நீடிப்பு வழங்கியிருந்தார்.

முதல் சேவை நீட்டிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09-ம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த சேவை நீட்டிப்பு இம்மாதம் 9ம் திகதியுடன் முடிவடைகிறது.

பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மற்றுமொரு அதிகாரி நியமிக்கப்படுவாரா அல்லது சி.டி.விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுவதா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, லலித் பத்தினயன மற்றும் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் பொலிஸ் திணைக்களத்தின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply