சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஆய்வறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முழுமையான நலன்புரிகள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பெற்றோரின் அரவணைப்பு இன்மை, குடும்பப் பிரச்சினைகள், சமூக ஊடக பாவனை, சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் பல்வேறு விதமான வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் அனாதரவாக விடப்பட்ட சிறுவர்களின் உடல், உளச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதனூடாக சிறுவர்கள் வன்முறைகளில் ஈடுபடும் தன்மை தொடர்பில் கவனம் செலுத்தி சிறுவர் பாதுகாப்புக்கு அவசியமான சமூக பங்களிப்பு தொடர்பிலான புதிய பிரவேசங்கள் பற்றிய விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்படும் நிறுவனம் சார்ந்த பாதுகாப்புக்களை மட்டுப்படுத்தி குடும்ப மட்டத்திலான பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply