போர்க்களமாக மாறிய இசை விழா: ஹமாஸ் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீரென்று தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், தரை வழியாக இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர்.
இஸ்ரேலில் ஜெவிஷ் விடுமுறை கொண்டாடப்பட்டு வந்தது. சனிக்கிழமை காஸா- இஸ்ரேல் எல்லையில் உள்ள கிராமப் பகுதியில் இசை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள்- பெண்கள் என இளையோர் கலந்து கொண்டனர். வெளிநாடுகளை சேர்ந்த இசைக்கலைஞர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் காஸா பயங்கரவாதிகள் திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதனை எதிர்பாராத இளைஞர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் இந்த இடம் போர்க்களமாக காட்சியளித்தன. ஒரே கூச்சல் குழப்பம் நிலவியது.
தங்களுடன் வந்தவர்களை பார்க்க முடியாத வகையில் தப்பித்தால் போதும் என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டனர். ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க, அங்கும் இங்கும் ஓடி மறைய முயற்சித்தனர். பலர் காருக்கு அடியில் பதுங்கி கொண்டனர். சுமார் ஆறு மணி நேரம் எந்தவித சத்தமும் போடாமல் தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.
இந்த தாக்குதல் காரணமாக அந்த இடத்தில் இளைஞர்கள் உடல்கள் சிதிறக் கிடந்தன. கிட்டத்தட்ட 260 பேர் உடல்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக, இஸ்ரேல் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விழா அமைப்பாளர்கள், விழாவில் கலந்து கொண்டு மாயமானவர்களை கண்டுபிடிக்க பாதுகாப்புப் படைக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
ஹமாஸ் பயங்கரவாதிகள், இந்த விழாவில் கலந்து கொண்டவர்களில் பலரை பிணைக் கைதியாக பிடித்து சென்றுள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply