பம்பலப்பிட்டியில் தமிழ் இளைஞர் கொலை : விசாரணை நடத்துமாறு அங்கிலிக்கன் ஆயர்
பம்பலப்பிட்டியில் கடலில் மூழ்கடித்துத் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் பேரருட்திரு டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். மனநோயாளியான ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வேறு சிலரும் தாக்கியமை தொடர்பில் பக்கச்சார்ப்பற்ற விசாரணையை நடத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன், தொடர்புடையவர்களைக் கைது செய்வதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகும் என பொலிஸ் மா அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தைக் காக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் உணரப்படவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்
பொலிஸ் அதிகாரிகள், இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். இந்நிலையிலேயே இவ்வாறான குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் ஆயர் சிக்கேரா குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply