இஸ்‌ரேல்-காஸா தொடர்பில் ஐநா பாதுகாப்பு மன்ற வாக்கெடுப்புக்கு ரஷ்யா கோரிக்கை

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்பான நகல் தீர்மானத்தின்மேல் திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாட்டுப் (ஐநா) பாதுகாப்பு மன்றத்திடம் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதநேய அடிப்படையிலான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் அத்தீர்மானம், பொதுமக்கள்மீதான வன்செயல்களுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்திற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நகல் தீர்மானத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பித்ததாக ஐநாவுக்கான ரஷ்யாவின் துணைத் தூதர் டிமிட்ரி போலியான்ஸ்கி கூறினார். அதன் பிறகு அதில் திருத்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை என்றார் அவர்.

15 உறுப்பினர்களைக் கொண்ட மன்றம், திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி) அதன்மீது வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply