உக்ரேன்மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரேன்மீது ரஷ்யா ஒரே இரவில் ஐந்து ஏவுகணைகள், 36 ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பீரங்கி, வான்வழித் தாக்குதல்களிலும் ஈடுப்பட்டதாக உக்ரேனின் ஆகாயப் படை அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் உக்ரேனின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளில் இரண்டை உக்ரேன் ஆகாயப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு விமானப்படை கூறியது.
உக்ரேனின் மேற்கு திசை நோக்கிப் பாய்ந்த 36 ஆளில்லா வானூர்திகளில் 11ஐ உக்ரேனின் ஆகாயப் படை அழித்ததாகவும் அது மேலும் தெரிவித்தது.
இந்தத் தாக்குதலில் பொதுமக்களில் மூவர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.
“அதிர்ஷ்டவசமாக, பொதுமக்களும் முக்கியமான உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், ஏவுகணை பல தனியார் வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது,” என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply