செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய நாசா

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல விண்வெளி ஆய்வுகளை நடத்திவருகின்றது. அவ்வாறான நிலையில், 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

இதன்படி, செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை நாசா நேற்றைய தினம் அனுப்பியுள்ளது.

63-வது பயணமான இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் சுமார் 90 வினாடிகள் வரை பறக்க உள்ளது.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும்.

பின்னர் அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன்பிறகு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply