காசாவிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கு இந்தியா அனுப்பிய பொருட்கள்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

தொடர்ச்சியாக 16 நாட்களாக இடம்பெற்றுவரும் தாக்குதலால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய விமானத்தை இந்தியா  நேற்று (22.10.2023) அனுப்பியுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி   தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

காசாவில் தவித்து வரும் பாலஸ்தீனர்களுக்காக உயிர் காக்கும் மருந்துகள், வெட்ட வெளியில் படுக்கும் வகையில் ஸ்லீப்பர் பேக், தார்ப்பாலின், மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முதல் கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளன என பதிவிட்டுள்ளார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply