காசாவில் நிலத்துக்குக் கீழ் காத்திருக்கும் பேராபத்து

வான்பரப்பில் தனது அகசாய வீரத்தை காட்டிய இஸ்ரேலுக்கு இனிதான் பாரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் என இராணுவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

காசாவில் நிலத்துக்கு கீழ் ஹமாஸ் தீவிரவாதிகளால் அமைக்கப்பட்டுள்ள சுரங்கபாதைகள் பாரிய வலையமைப்பை கொண்டுள்ளது.

அவர்களின் ஏவுகணைகள் மற்றும் ஆய்த தளபாடங்கள் மற்றும் வெளியுலக தொடர்புகொள்ளும் தொழிற்நுட்ப சாதனங்கள் அதைவிட சுமார் 40,000 பேர் தங்கக்கூடிய வசதிகள் மற்றும் உரிய நேரத்தில் அங்கிருந்து வேறுநாடுகளுக்கு தப்பிச்செல்லும் வசதிகள் என ஹமாஸின் இந்த கட்டமைப்பை உடைத்துக்கொண்டு முன்னேறுவது என்பது இலகுவானதல்ல.

சுமார் 500 கிலோமீட்டர் உள்ளமைப்பை கொண்ட இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் காசாவை தனது ஆளு கைக்குள் கொண்டுவந்த நாளில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காசாவில் கட்டுமானப்பணிகளுக்காக இஸ்ரேல் வழங்கிய கட்டுமான பொருட்களை வைத்தே இந்த பாரிய சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2007இல் இந்த கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்துக்கு பிரான்ஸில் நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலப்பாதைபோல உட்கட்டமைப்பு இருப்பதாக தெரியவருகின்றது.

மேற்படி சுரங்கப்பாதைக்குள் உள்ளிடுவதற்கு சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட இஸ்ரேலின் மோப்பநாய்களை கொண்டு இலக்குகளை கண்டறிய இஸ்ரேல் தனது சக்தியை பயன்படுத்தும் என்பதோடு சுரங்கப்பாதைக்குள் உள்ளிட கூடிய இலகுரக யுத்த டாங்கிகளில் குண்டுகள் பொருத்தி தாக்கும் வல்லமை இருப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply