அமெரிக்க படையினரை இலக்குவைக்கவேண்டாம் – ஈரானிற்கு பைடன் நேரடி எச்சரிக்கை
அமெரிக்க படையினரை இலக்குவைப்பது குறித்து ஈரானிற்கு ஜனாதிபதி ஜோபைடன் நேரடி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கான நேரடி செய்தியில் பைடன் இதனை தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
நேரடி செய்தியொன்று தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
900 அமெரிக்க படையினர் பிராந்தியத்தில் உள்ளனர் அல்லது பிராந்தியத்தில் மோதல்கள் அதிகரிக்கும் நிலையில் அங்குள்ள அமெரிக்க படையினரை பாதுகாப்பதற்காக வான்வெளிப்பாதுகாப்பை வலுப்படுத்த சென்றுள்ளனர் எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஈராக்கில் 12 தடவையும் சிரியாவில் 4 தடவையும் அமெரிக்க படையினர் இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என பென்டகன் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply