மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு அனுப்புவதற்கு அனுமதியை கோரியுள்ளது சீனா
சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை கோரியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2024 முற்பகுதியில் மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல் இலங்iகைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது எனினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என இரண்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீன கப்பல்களின் இலங்கை விஜயம் குறித்த இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் முன்னர் போலஇலங்கையை சேர்ந்த சகா இல்லாமல் சீனா தனித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை கோரியுள்ளது எங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பதையும் சீனாவே தீர்மானிக்கவுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை சீனா அனுமதியை கோரவில்லை பெப்ரவரி நடுப்பகுதியில் கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது என மிக முக்கிய அதிகாரியொருவர் எக்கனமி நெக்ஸ்டிற்க்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply