கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்கும் எத்தகைய தீர்மானமும் கிடையாது:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என,கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் ஒரு வினாடி கூட அனுமதிக்கக்கூடாதென்பதே, தமது நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி எம், பி நிராேஷன் பெரேரா உரையாற்றும்போது எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிராேஷன் பெரேரா எம். பி. தமதுரையில் தெரிவித்ததாவத:

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு சென்ற போது தெரிவித்துள்ள கருத்துக்களில் கச்சதீவையும் வடக்குக் கடலையும் இந்தியாவுக்கு வழங்கிவிட்டார்களா என்ற சந்தேகமே எழுகின்றது.

இது தொடர்பில் வடக்கு கடற்றொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply