உரிமை கோரப்படாத சடலங்கள் உரியவர்கள் பொறுப்பேற்குமாறு கேரிக்கை
யாழ். போதனா மருத்துவமனையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி விடுதி இலக்கம் 34இல் அனுமதிக்கப்பட்ட அடையாளங்காணப்படாத பெண்ணொருவரின் சடலமும் கடந்த 23ஆம் திகதி தெல்லிப்பழை பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த திருமதி ரு.கிரிஷாந்தன் எனும் பெண்ணின் சடலமும் கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி விடுதி இலக்கம் 08இல் உயிரிழந்த சின்னக்கடை பகுதியை சேர்ந்த 63வயதுடைய நல்லூராஜ் ஆகிய மூவரின் சடலங்களே இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்களை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply