கம்பளையில் பெண்ணொருவர் படுகொலை
வீடொன்றில் இருந்து பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியைச் சேர்ந்த பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையுண்ட பெண் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடையாளம் தெரியாத நபரொருவர் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றிருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply