பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பாபர் ஆசாம்
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார். நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டின் தலைவர் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார்.
“இது கடினமான முடிவு, ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன” என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்களை அதன் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply