மீள்குடியமர்வை அரசு விரைவுபடுத்தியுள்ளது: சோலா டொவெல்

மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கவைக்கப்படிருந்தவர்களுள் பல்லாயிரக் கணக்கானோர் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 30 வருடங்களாக தொடர்ந்த விடுதலைப் புலிகளுடனா மோதல் கடந்த மே மாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதனையடுத்து 300,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்படிருந்தனர்.

ஓகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 90,000 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்த 10 நாட்களுக்குள் இடம்பெயர்ந்துள்ள் 30,000 மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவில் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பாளர் சோலா டொவெல் தெரிவித்தார். அரசாங்கத்தின் விரைவான மீள் குடியேற்ற பணிகளை தாம் வரவேற்பதாகவும் அவர் தொலைபேசி வாயிலான நேர்காணலில் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் மட்டும் 2,500 முதல் 4,000 பேர்வரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக சோலா டொவெல் தெரிவித்தார்.முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் வவுனியா, மன்னாரின் வடகிழக்கு பகுதி, வவுனியா வடக்கு மற்றும் கிழக்கில் மீளக்குடியம்ர்த்தப்பட்டுள்ளனர்.

சொந்த இடங்களில் காணப்படும் நிலக் கண்ணி வெடி அபாயம் காரணமாக அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாதுள்ளது.

மீளக்குடியேறுவர்களுள் பலர் பாடசாலைகளிலும்,தேவாலயங்களிலும், மற்றும் சில கட்டிடங்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதுடன் நிவாரண பணியாளர்களும் முழு நேரமும் அங்கிருப்பதில்லை எனவும அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply