அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்திலுள்ள மனநல வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் குறித்த வைத்தியாசலையில் கடமைபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிராட்லி ஹாஸ் (63) என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தின் போது வைத்தியாசாலையிலுள்ள பொலிஸ் அதிகாரி விரைவாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் துப்பாக்கிதாரியான சந்தேகநபர் உயிரிழந்தார். பொலிஸ் அதிகாரிக்கு காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில், சந்தேகநபர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
வெள்ளிக்கிழமை மாலை நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கர்னல் மார்க் ஹால் தெரிவிக்கையில்,
மனநல வைத்தியசாலையின் நுழை வாயிலுக்குள் புகுந்த சந்தேக நபர் நடத்திய துப்பாக்க்சூட்டில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தார்.
இந்நிலையில், விரைவாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் சந்தக நபர் கொல்லப்பட்டார்.
சந்தக நபரை அடையாளம் காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட லொறி சோதனை செய்ததில் எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply