செல்வம் அடைக்கலநாதனிடம் நேற்று 8 மணிநேர விசாரணை
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நேற்று பல மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 08 மணிநேரம் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இன்று மீண்டும் விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு அவர் அனுப்பப்பட்டதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
முதல் நாள் விசாரணை முடிந்து திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதை தவிர்த்துக் கொண்டார். அதேவேளை, தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீதான குறித்த விசாரணை முடியும் வரை ஊடகங்களுக்கு கருத்து எதுவும் கூற முடியாதிருப்பதாக டெலோ தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா இது தொடர்பாகக் குறிப்பிட்டார்.
வவுனியா டெலோ அலுவலகத்தில் பாதுகாப்பு தரப்பினரால் சில மாதங்களுக்கு முன் கைதான டெலோ உறுப்பினர் இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தங்கியிருந்த இவர், நேற்று முன் தினம் தான் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply