இஸ்ரேலிய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட உறவினரின் புதைகுழிக்கு சென்ற பிறகே வீட்டிற்கு செல்வேன் : விடுதலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண் தெரிவிப்பு
இஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுதலை செய்யபட்ட பாலஸ்தீன யுவதி மேற்குகரையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உறவினரின் புதைகுழிக்கு செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
23 வயது நூர்ஹான் அவாட் மேற்குகரையில் வைத்து விடுதலை செய்யப்பட்டார். ஜெரூசலேத்தில் 2015 இல் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்ள முயன்றார் என்ற சந்தேகத்தில் இவர் கைதுசெய்யப்பட்டார் அவ்வேளை இவர் சுடப்பட்டார்.
பத்துஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நூர்ஹான் அவாட் 8 ஆண்டுகள் தண்டனையை பூர்த்தி செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலையான பின்னர் தான் கைதுசெய்யப்பட்ட அன்று சுட்டுக்கொல்லப்பட்ட உறவினரின் புதைகுழிக்கு சென்ற பின்னரே வீடு திரும்புவேன் என தெரிவித்து அங்கு சென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply