இலங்கைக்கு கடன் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

இலங்கை தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு உதவும் முகமாக சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். அந்நாட்டு வழங்குகின்ற கடன் தொகையில் இரண்டாம் தவணையையும் அந்நாட்டுக்கு வழங்க ஒப்புதல் ஐ.எம்.எஃப்.இன் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம் அண்மைய காலமாக செயல்பட்டுவரும் விதத்தை மீள்பரிசீலனை செய்த பின்னர், இரண்டாம் தவணையாக கிட்டத்தட்ட 33 கோடி டாலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு ஐ.எம்.எஃப். நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு மொத்தத்தில் 260 கோடி டாலர்கள் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த ஜூலை மாதம் தீர்மானித்திருந்தது. இலங்கையின் பொருளாதாரம் செயல்படும் விதத்தை கவனத்தில் கொண்டு ஓர் இருபது மாத காலகட்டத்தில் மொத்தக் கடன் தொகையை பல்வேறு தவணைகளாக வழங்குவது என்று அப்போது முடிவுசெய்யப்பட்டிருந்தது.

முதல் தவணையாக 33 கோடி டாலர்களை உடனடியாகவே இலங்கையிடம் கொடுத்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் இலங்கையின் பொருளாதாரம் எவ்விதமாக செயல்படுகிறது என்பதை தற்போது மீள்பரிசீலனை செய்துள்ளது. இந்த மீள் பரிசீலனையின் முடிவில் இரண்டாவது தவணையாக மேலும் 33 கோடி டாலர்களை வழங்க ஐ.எம்.எஃப் தீர்மானித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply