வடக்கு – கிழக்கு சிறுவர்கள் கடத்தல் விசாரணை தீவிரம் :இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறார்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ‘எமது நாட்டில் உள்ள 13 சிறார்கள் மலேசியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இலங்கையில் உள்ள சிறார்கள் மலேசியா ஊடாகப் பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் ஆட்கடத்தல் வியாபாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு சம்பந்தமாக சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் பிரகாரம் வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் மலேசியாவுக்கு அனுப்பப்படுகின்றனர். எனத் தெரியவந்துள்ளது – என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply