போருக்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் துவக்கம்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள யோகபுரம் மகாவித்தியாலயத்தில் திங்கட்கிழமை முதல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார். ஞாயிற்றுக்கிழமை அந்தப்பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுநர் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்று வருகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான மதிப்பீடு செய்த கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இதேவேளை துணுக்காய் பிரதேசத்தில் திங்கட்கிழமை முதல் அஞ்சல் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply