மட்டக்களப்பில் இரு தினங்களில் 18 பேர் சுட்டுக்கொலை

கடந்த இரண்டு தினங்களில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர். 
 
நேற்று புதன்கிழமை இரவு மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் பூசகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட மாமாங்கம் சிவ முத்துமாரியம்மன் ஆலைய பூசகரான கமல்ராஜின் (38) சடலம் பொலிஸாரால் இன்று அதிகாலை 2 மணிக்கு மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதாக அரசாங்கத்தால் கூறப்பட்டுவரும் நிலைலேயே அங்கு இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு நாவற்காடு வைத்தியசாலையைச் சேர்ந்த சிங்கள வைத்தியர் பாலித பத்மகுமாரவின் படுகொலையுடன் தொடர்புடைய மூவரும் கொல்லப்பட்டவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply