பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் பூர்த்தியாவதை ஜெர்மனி கொண்டாடியுள்ளது
பெர்லின் சுவர் வீழ்ந்ததன் இருபது வருட நிறைவைக் குறிக்கும் வகையிலான வைபவத்தில் கலந்துகொண்ட ஜெர்மனிய ஆட்சித் தலைவரான அங்கேலா மெர்க்கல் அவர்கள், கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியை இணைக்கும் பாலம் ஒன்றின் மூலம் வைபவரீதியாக நடந்துவந்தார்.
இந்தப் பாலம்தான் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது முதன் முதலில் திறக்கப்பட்ட எல்லைக் கடவை மையம் ஆகும். முன்னாள் சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பசேவ், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸ ஆட்சிக்கு எதிராக முதல் முதலாக வெற்றிகரமாக சவால் விடுத்த போலந்து தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவரும், பின்னாளில் அதிபராக வந்தவருமான லெக் வலேஸா ஆகியோர் இந்த வைபவத்தில் மெர்க்கெலோடு நடந்து வந்தார்கள்.
ஜெர்மனியின் கிழக்குப் பகுதி போதிய பொருளாதார வளர்ச்சியைப் பெறாத நிலையில், ஜெர்மனியின் இணைவு இன்னமும் முழுமை பெறவில்லை என கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்தவரான மெர்க்கெல் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply