வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்பு!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்களை அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்புச் செய்வதாக ஞாயிறு (08.11.2009) காலை 10.30 மணியளவில் மன்னார் அரச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்தனர்.

சிறீ ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருக்கும் மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஈரோஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் ஆர். பிரபாகரன், சிறி ரெலோ (Sri TELO) இயக்கத்தின் செயலாலர் நாயகம் ப. உதயராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
மன்னார் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாவட்டத்தின் பாதுகாப்பு நிலவரம், வேலைவாய்ப்பு மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலாக இடம்பெற்றிருக்கின்றது.
மேற்படி கலந்துரையாடல் மன்னார் அரச செயலகத்தின்  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும்  மக்கள் பிரதிநிதிகள் தாம் எதிர் நோக்கும், பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் தலைமையிலான குழுவினருக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.

மேற்படி கூட்டத்திற்கு  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படடிருந்த போதும் இறுதி நேரத்தில் அவரின்  பிரதிநிதியாக கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயந்த மற்றும் ஜனாதிபதியின் மற்றுமொரு ஆலோசகரான சாந்த பிரேமரத்ன, ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

வழமையாக இடம் பெறும் கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் எந்தவொரு ஊடகவியலாளர்களும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படுவதில்லை எனவும் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் ஊடகவியலாளர் சார்பில் அமைச்சரின் கவவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்களை அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்புச்செய்கின்றனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப்பணிகளில் ஊழல்கள் இடம் பெறுவதாக சந்தேகிக்க வேண்டியிருப்பதாகவும் அமைச்சர்  சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply