நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை
நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவற்துறையினர் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப்பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்கப்படுகிறது.இளைஞன் யுவதியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் மூன்றாவது நபர்கள் எவராவது இதில் சம்பத்தப்பட்டுள்ளனரா என்பதை அறிவதற்காகப் பொலீஸார் சாட்சிகளிடம் தகவல்களைக் கோரியுள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட யுவதி முப்பது வயதான ராகவி வரதராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒரு பல் மருத்துவர். உயிரிழந்த ஆணின் விவரங்கள் தெரியவில்லை. அத்துடன், உயிரிழந்தப் பெண் பலமுறை உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், அது குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த முறைப்பாடு தொடர்பில் காவற்துறையினர் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நோர்வேயின் கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் (36 பேர்) கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வருடாந்த கொலை எண்ணிக்கை 30ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும். புத்தாண்டு தினத்திலிருந்து மேலும் ஆறு கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply