அறிவு பூர்வமான எதிர்கால சந்ததியை உருவாக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறது: ஜனாதிபதி
அறிவு பூர்வமான எதிர்கால சந்ததியை உருவாக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் இயங்கும் சகல பல்கலைக்கழகங்கள் கல்விக்கல்லூரிகள் என்பன சர்வதேச தரத்திற்கேற்ப நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாம் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது இன்றுள்ள பிரச்சினைகளை எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச் செல்லமாட்டோம் என்ற வாக்குறுயை நாட்டு மக்களுக்கு வழங்கினோம். அதனை நிறைவேற்றி வருகின்றோம் என சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்தினபுரி ருவன்புர தேசிய கல்விக் கல்லூரியின் தகவல் தெழில்நுட்ப பீடம் நேற்று சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய சனாதிபதி உயிர்த்தியாகம் செய்து வெற்றிகொண்ட நாட்டை மீளக் கட்டியெழுப்புவதேயல்லாமல் தாய்நாட்டை சூழ்ச்சிகளினால் சிதைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
நாம் உண்மையான அர்ப்பணிப்புடனேயே யுத்தத்தை வெற்றிகொண்டுள்ளோம். அதன் மூலம் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது. சந்தேகத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்த நாட்டு மக்களுக்கு இது சிறந்த நிவாரணமாக அமைந்துள்ளது. பலமுள்ள எதிர்கால சந்ததியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம். நவீன உலகத்துடன் நம் கிராமிய இளைஞர் யுவதிகளும் இணைவதற்குப் பொருத்தமான தகவல் தொழிநுட்ப அறிவைப் பொற்றுக்கொடுக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் சனாதிபதி தெரிவித்தார்.
இதன் ஒரு அம்சமாகவே தகவல் தொழிநுட்பத்துறை வளர்ச்சிக்கு முக்கியமளித்துள்ளோம். இதற்கமைய இந்த வருடத்தை தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழிப்பயிற்சி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளோம்.
இவ்வருட இறுதியில் நாடளாவிய ரீதியில் நான்காயிரம் கணனிப்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டுவிடும். அத்துடன் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் ‘லெப்டொப்’ களை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். தொழில்நுட்பத்தைக் கற்பதென்பது ஒரு பொழுதுபோக்கு ஆகிவிடக்கூடாது நாட்டின் கல்வி விவசாயத்துறை உட்பட சகலதுறைகளின் வளர்ச்சிக்கும் அதன் உபயோகம் போய்ச்சேர வேண்டும். நாம் யுத்தத்தின்போதும் தகவல் தொழிநுட்பங்களை உபயோகித்தே வெற்றிகொண்டோம்.
இராணுவ வீரர்களை சந்தேகத்துடன் பார்க்கும் யுகமொன்றிருந்தது. அந்த யுகத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்து அவர்களுக்கான அனைத்தையும் வழங்கி உரிய கௌரவத்தையும் வழங்கினோம் எனவும் சனாதிபதி தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
நன்றி: ஜனாதிபதி இணையம்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply