நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் உள்ளது : உலக வங்கி
நாட்டின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 1.7 வீதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 2.4 வீதமாகவும் வளர்ச்சியடையும் என உலக வங்கி கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலக வங்கியின் அறிக்கைக்கு இணங்க, நாட்டின் பொருளாதாரம் 2023 இல் 3.8 சதவீத எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2022-2023 நிதியாண்டில் இலங்கையின் உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தனியார் கடன் வழங்குநர்களுடன் இலங்கைக்கான கண்ணோட்டம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply