அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்:தலைவர் சஜித் பிரேமதாச

பிரதமர் பதவியை பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றிருந்தால் திருடர்களுடனயே காலம் கடத்த நேரிட்டிருக்கும்.வரும் தேர்தல்களில் கூட திருடர்களுடன் சேர்ந்தே வாக்கு கேட்க வேண்டியிருந்திருக்கும்.திருடர்களை சட்டத்தின் முன் பாதுகாத்திருந்திருக்க வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருடர்களை பிடிக்க அரச அதிகாரம் தேவையில்லை என்றும்,அரச அதிகாரம் இல்லாமலயே உயர் நீதிமன்றத்தால் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வெளிக்கொண்டு வர முடிந்தது.தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தால் திருடர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாது போயிருக்கும் என்றும்,உயர் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை வழங்கினாலும் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியைப் போன்று கண்டும் காணாமலும் இருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் துறைமுக அதிகா ரசபைக்கு சொந்தமான இரு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டம் போட்டனர்.

வங்குரோத்தடைந்த நாட்டில் இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றதாகவும்,தானும் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்திருந்தால், ரணில் விக்கிரமசிங்க போன்று இவ்வாறான சட்ட விரோத செயல்களை கண்டுகொள்ளாதது போன்று செயற்பட்டிருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 65 ஆவது கட்டமாக,மதுகம விதிய பண்டார வித்தியாலத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சோசலிசம் என்பது வார்த்தைக்கு மட்டுமே. எனவே அதற்கு ஏமாறாதீர்கள்,

சோசலிசம் என்ற பெயரில் வீதியில் இறங்கி போராடும் புரட்சியாளர்களின் பிள்ளைகள் கூட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்தர ஆடைகளை அணிந்து பயின்று வந்தாலும் அந்த வசதிகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்குதற்கு விருப்பம் இல்லாது செயற்பட்டு வருகின்றனர்.

சோசலிசம், சமத்துவம்,நீதி,நியாயம் என்று பேசினாலும் அவை வார்த்தைகளுடன் மாத்திரம் மட்டுப்பட்டவை என்றும், 2019 இல் கூட வெற்று கோஷங்களுக்கு செவி சாய்த்து ஏமாற்றியதாலும் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இம்முறையும் அதே போன்ற பரப்புரைகளை நம்பி ஏமாந்தால் நாடு இன்னும் ஆழமான பாதாளத்திற்குச் செல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply