எந்தக் கட்சியையும் இணைத்து செயற்பட அரசாங்கம் தயார்

தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் எந்தக் கட்சியையும் இணைத்துக்கொண்டு செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளதென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரிக் கட்சிகளும் எம்மோடு கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த வகையில் இம்முறை நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு நாட்டின் எதிர்கால பயணத்தின் முக்கிய மைல் கல்லாக அமையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டையொட்டிய விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித் ததாவது- நாடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் சவாலில் வெற்றிகண்டு தற்போது அபிவிருத்தி சவாலுக்கு முகங்கொடுத்து வருகிறது. நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் இச்சவாலான பயணத்தில் ஜே.வி.பி., ஐ.தே.க என்றில்லாமல் எந்தக் கட்சியும் இணைந்து செயற்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். (ரு-ஜ)

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply