41 நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் 500க்கும் மேற்பட்ட இலங்கையர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

41 வெளிநாடுகளில் வதியும் 500க்கும் மேற்பட்ட புலம்பெயர் இலங்கையர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று கொழும்பில் சந்தித்தனர். இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வெளிநாடுகளில் வதியும் புலம்பெயர் இலங்கையரின் முதலீடுகளை இலங்கைக்குள் கவர்ந்திழுக்கும் நோக்கில் புலம்பெயர் இலங்கையருக்கான மன்றம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.

இந்த மன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் உரையாற்றுகையில்:-

‘உங்களை நான் அன்போடு வரவேற்கின்றேன். நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் தாய்நாட்டுக்கு நீங்கள் வந்துள்ளனர்கள். இது உங்களுக்கும் சந்தோஷம் எமக்கும் மிகுந்த மகிழ்ச்சியே’ என்றார்.

இவ்வைபவத்தின் போது, புலம்பெயர் இலங்கையரை மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பதற்கும் முதலீடுகளை செய்ய அவர்களை ஊக்குவிப்பதற்கும் புதிய இணைய தளமொன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அந்த இணைய தளத்தின் முகவரி www.connectsrilanka.net ஆகும். இம்மன்றத்தில் பங்குபற்றியுள்ள புலம்பெயர் இலங்கை யருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இராப்போஷண விருந்துபசாரமும் வழங்கினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply