இந்திய இராணுவம் உசார் நிலையில் இருந்தது என்ற சரத் பொன்சேகாவின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது
இலங்கையில் இராணுவப் புரட்சி நடைபெறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய அரசின் உதவியைக் கோரியதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்ற சரத் பொன்சேகாவின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது. பொன்சேகாவின் கூற்றை உறுதியாக மறுத்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர், இது ஆதர பூர்வமற்றது என்று கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவிப்பது அவசியமற்றது எனக் குறிப்பிட்ட அவர் எனினும் இந்திய இராணுவம் உசார் நிலையில் இருந்தது என்ற கருத்து முழுக்க முழுக்க தவறானது என்பதை மட்டும் தன்னால் உறுதிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply