தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக ஒரு தரப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், ஒரு தரப்பினர் எதிர்க்கட்சியின் பொதுவான வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், எந்தக் கட்சிக்கு தேர்தலில் ஆதரவளிப்பது என்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
எம்.ஸ்ரீகாந்தா, சிவநாதன் கிஷோர் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டுமென தெரிவிப்பதாக குறித்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுரேஸ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் எதிர்க்கட்சிகளினது பொதுவான வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply